×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ‘ராப்’ பாடல் பாடிய இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த அறிவு என்ற இளைஞர் தனிமனித  ராப் பாடல் மூலமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார்.  இந்தப் பாடலை தெருகுரல் என்ற பெயரில் வாரம் ஒருநாள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி வந்துள்ளார். கடந்த வாரம் செம்மொழி பூங்கா அருகே இவர் பாடிய  இந்த பாடலை இணையதளம் வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். அந்தப் பாடலைப் பாடிய இளைஞரை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், கலைஞரின் ஓராண்டு முரசொலி மலரை அந்த இளைஞருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாகவும் இளைஞர் அறிவு தனது கையொப்பத்தை பதிவு செய்தார். அப்போது  இளைஞர் அறிவு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘என்னுடைய பாடல் தமிழகம் முழுவதும் பார்த்து ரசித்து இருந்தாலும் ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் தலைவர் என்னை அழைத்து பாராட்டியது மறக்க முடியாதது என்று கூறினார்.   இந்த  நிகழ்ச்சியின் போது, திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : MK Stalin ,Civil Rights Act Citizenship Amendment , Citizenship Amendment Act, Youth, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...