×

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி? : தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

டெல்லி : டெல்லி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 50% வாக்குகளுக்கு மேல் பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக டைம்ஸ் நௌ செய்தி நிறுவனம் களநிலவர ஆய்வு அமைப்பு Ipsos ஆகியவை இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 54-60 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 10-14 இடங்கள் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. மொத்தத்தில் ஆம் ஆத்மீ கட்சி 52% வாக்குகளை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று டைம்ஸ் நௌ கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு வரும் 8ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

Tags : Delhi ,AAP , Delhi, Assembly, by-election, AAP, Times Now, Bharatiya Janata Party
× RELATED டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த...