×

சபரிமலை வழக்கு விசாரணை தேதி: நாளை மறுநாள் முடிவு: உச்ச நீதிமன்றம் தகவல் சபரிமலை வழக்கு விசாரணை தேதி: நாளை மறுநாள் முடிவு: உச்ச நீதிமன்றம் தகவல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம் என்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 62க்கும் மேலான மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண்், நாகேஸ்வரராவ், எம்.எம்.சந்தானகவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த விவகாரம் சபரிமலை விவகாரம் மட்டுமல்ல. அதையும் தாண்டி மதம் சார்ந்த விவகாரம் என்பதால், தற்போது உள்ள 9 நீதிபதிகள் அமர்வு என்பது  அனைத்து கேள்விகளுக்கும் விடை காணும் பொருட்டாக இருக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமண் தனது வாதத்தில், இந்த வழக்கை பொருத்தமட்டில் அனைத்தும் சட்டத்தின் மூலமாகவே  முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்போது, இந்த வழக்கு மிகவும் நுணுக்கமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை நீதிமன்றம் கண்டிப்பாக கருத்தில் கொள்ள  வேண்டியுள்ளது’’ என்றார்.

 இதையடுத்து பெண்கள் அமைப்பு தரப்பில் ஆஜரான இந்திரா ஜெய்சிங் தனது வாதத்தில், சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பெண்களை அங்கு அனுமதிக்க மறுப்பதை ஏற்க முடியாது. மேலும், இந்த வழக்கை பிரதான  பிரச்னையாக நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.இதையடுத்து தலைமை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழ்கில் முக்கிய பிரச்னைகளை மட்டும் நாங்கள் விவாதிக்க உள்ளோம். குறிப்பாக சபரிமலை வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்களை நாங்கள் விசாரிக்க போவதில்லை.  அதைவிடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபடுவது, மசூதிக்குள் பெண்கள் வழிபடு நடத்துவது, பார்சிகளின் வழிபாட்டு தலங்களில் உள்ள பிரச்னை ஆகியவை குறித்து தான விசாரிக்க உள்ளோம். இதில்  ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு எழுப்பிய 7 கேள்விகளையும் விரிவாக விவாதிக்க உள்ளோம்’’ என கூறினார்.

மேலும், வழக்கை ஒத்திவைப்பதாகவும், இருப்பினும் வரும் வியாழக்கிழமை இந்த வழக்கில் யாரெல்லாம் வாதிட உள்ளார்கள், அதற்காக எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்வது, எந்த தேதியில் இருந்து விசாரணையை தொடங்குவது என்பது  குறித்து இறுதி முடிவு செய்யப்படும். இதில் முடிந்தவரையில் சபரிமலை தொடர்பான வழக்கை அடுத்த வாரம் பட்டியலிட்டு விசாரிக்கும் நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும் என நேற்று உத்தரவிட்டார்.



Tags : Superior Court ,Sabarimala , Sabarimala case,Tomorrow, Result
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு