வதோதரா: தமிழகம் - பரோடா மோதும் ரஞ்சி லீக் ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்குகிறது.நடப்பு ரஞ்சி தொடரில் தமிழகம் இதுவரை 6 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. கர்நாடகா, இமாச்சல் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி கண்ட நிலையில்... மத்தியப்பிரதேசம், உ.பி, மும்பை அணிகளுடன் டிரா செய்து தடுமாறிக் கொண்டிருந்தது.புள்ளிப் பட்டியலில் பின்தங்கியதுடன் அரை இறுதி வாய்ப்பும் நழுவிக் கொண்டிருந்த நிலையில், ரயில்வேயை 167 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
7வது லீக் போட்டியில் பரோடா அணியை எதிர்த்து விளையாடுகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று தொடங்கும் இந்த போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பை தமிழகம் தக்கவைக்கலாம். பரோடா இதுவரை 6 போட்டிகளில் தலா 2 வெற்றி, தோல்வி, டிராவுடன் தமிழகத்தை விட வலுவான நிலையில் உள்ளது. இந்த 2 அணிகளும் ரஞ்சித் தொடர்களில் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் தமிழ்நாடு 4 போட்டிகளிலும், பரோடா ஒரு போட்டியிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.
