×

600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தாம்பரம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் சார்பில் வியாபாரிகளிடம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தடையை மீறி பல கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில், தாம்பரம் ரங்கநாதபுரம், தாம்பரம் மார்க்கெட் பகுதி, முத்துரங்கம் சாலை, சண்முகம் சாலை, மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பைய ராஜா தலைமையில் சுகாதார அலுவலர் மொய்தீன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கடைகளில் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்  உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு ரூ.33,500 அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து இது போன்ற பிளாஸ்டிக் பறிமுதல் நடைபெறும் என்று நகராட்சி ஆணையர் தாம்பரம் நகர பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

Tags : plastic, Confiscation , goods
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...