சென்னை: தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 கடலோர மாவட்ட கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராமங்களில் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலகட்டங்களில் கடல் எழும் பேரலை காரணமாக கடல்நீர் உட்புகுவது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் கடலில் அரிப்பால் வீடுகள் கடும் சேதமடைகிறது. இதை தடுக்கும் வகையில் கடல் அலை தாக்கத்தை குறைக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.அதன்பேரில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பாறைகளை கொட்டி அந்த இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கிறது.
தற்போது இந்த திட்டத்திற்கு தடை உள்ளதால் தற்போது புதுச்சேரியில் என்ஐஓடி (National institute of ocean technology) என்ற மத்திய அரசின் நிறுவனம் சார்பில் முக்கோண வடிவில் ஸ்டீல் அமைத்து தூண்டில் வளைவு அமைத்துள்ளது. இந்த தூண்டில் வளைவு மூலம் கடல் அலையை தடுப்பது மட்டுமின்றி, வேறொறு இடத்தில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த தூண்டில் வளைவு 30 ஆண்டுகள் வரை எந்தவித சேதமடைவது கிடையாது என்றும், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலகட்டங்களில் தாங்கி நிற்கும்.