×

காப்பான் திரைப்பட பாணியில் பயங்கரம் கூட்டம் கூட்டமாக வந்து பயிரை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

லாகூர்: பாகிஸ்தானில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதை தொடர்ந்து அங்கு தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த காப்பான் திரைப்படத்தில், வில்லன் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை உற்பத்தி செய்து விளைநிலத்தில் கொண்டு வந்துவிட்டு பயிர்களை அழிக்கச் செய்யும் காட்சி இடம்பெறும். இதுபோன்ற காட்சிகள்  கற்பனையானவைதான் என நினைத்துக்கொண்டிருந்த நிலையில் அதுபோன்ற உண்மை சம்பவம் அரங்கேறி வருகின்றது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து குஜராத் மற்றும்  ராஜஸ்தான் மாநிலங்களுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் சில மணி  நேரங்களில் மொத்தமாக கோதுமை பயிர்களை அழித்து நாசம் செய்து விவசாயிகளை   அதிர்ச்சியடைய வைத்தன. சில வாரங்கள் பஞ்சாப்பில் முகாமிட்டு பயிர்களை  அழித்த வெட்டுக்கிளிகள் தற்போது  மீண்டும் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளன. பாகிஸ்தானின் பல்வேறு  பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை  உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன.

20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால் லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்  நஷ்டம்  ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது. அப்போது வெட்டுகிளிகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. வெட்டுக்கிளிகளிடம் இருந்து  பயிர்களை காப்பாற்றும் பணிகளுக்காக ரூ.730 கோடி ஒதுக்கீடு செய்யவும்  இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.வெட்டுக்கிளிகள் தாக்குதலால் விவசாயிகள் கதிகலங்கி போயுள்ளனர்.

Tags : Pakistan , Kaplan movie, style ,Pakistan
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...