×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றைக்கும் பயன்படுத்தப்படுகிறது: மத்திய அரசு மீது பினராய் விஜயன் தாக்கு

மும்பை: குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததற்காக மத்திய அரசு மீது கடும் தாக்குதல் தொடுத்த கேரளா முதல்வர் பினராய் விஜயன், ‘‘ஆங்கிலேயர் கடைப்பிடித்த அதே பிரித்தாளும் தந்திரத்தை தற்போது “வகுப்புவாத சக்திகள்”  பயன்படுத்துகின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.

மும்பையில் நேற்று முன்தினம் ‘வகுப்புவாதத்துக்கு எதிரான தேசிய போராட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சில் கேரள முதல்வர் விஜயன் கலந்து கொண்டு பேசியதாவது:கடந்த காலத்தில் நமது போராட்டம் காலனிஆதிக்கக்காரர்களை எதிர்த்து நடந்தது. ஆனால் இப்போது வகுப்புவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் காலனியாதிக்கக்காரர்கள் பக்கம் நின்றவர்களுக்கு எதிராக நடக்கிறது. கடந்த காலத்தில் மத அடிப்படையில் மக்களை பிரிப்பதன் மூலம் அவர்களுடைய ஒற்றுமையை சீர்குலைக்க காலனியாதிக்கக்காரர்கள் முயற்சித்தனர். இன்றைக்கு வகுப்புவாத சக்திகள் அவர்களுடைய மாஸ்டர்கள் கடைப்பிடித்த அதே  தந்திரத்தையே கடைப்பிடிக்கிறார்கள்.இவ்வாறு முதல்வர் விஜயன் பேசினார்.

Tags : attack ,government ,separatist ,Pinarayi Vijayan ,splinter , Opposition ,Citizenship Amendment Act,central government
× RELATED ‘இது என் திருப்பூர்…...