×

நண்டு குருமா

நண்டை நன்றாக சுத்தம் செய்யவும். பல்லாரி, தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பல்லாரியை சேர்த்து வதக்கவும்.  நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து, மிக்சியில் போட்டு அரைக்கவும். பின்னர் தேங்காய், சோம்பு, கசகசாவை ஒன்றாக சேர்த்து அரைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளித்த பின்னர் அரை ஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்த பின்னர் நண்டை அதில் கொட்டிக் கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த வெங்காய தக்காளி விழுதைச் சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக அதில் அரை டம்ளர் தண்ணீர்  ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். மணமணக்கும் நண்டு குருமா ரெடி.

Tags : Crab Kuruma
× RELATED முறையற்ற வாழ்க்கை முறையால் உயிருக்கு...