×

மாணவிகளுக்கு ரூ.3.63 கோடியில் விடுதி கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை லேடி வெலிங்டன் வளாகத்தில் 3 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிக பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியருக்கான 2 விடுதிக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி நேற்று திறந்து வைத்தார். இதேபோல் அரியலூர் மாவட்டம், சுண்டக்குடியில் 91 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடம், கோயம்புத்தூர் மாவட்டம்,               நாயக்கன்பாளையத்தில் 93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம் என பல மாவட்டங்களில் மொத்தம் 12 கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 12 விடுதிக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,hostel building , Chief Minister,inaugurated,hostel building , Rs 3.63 crore for students
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...