×

CAA, NRC, NPR-க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியாகாந்தி தலைமையில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியுரிமை சட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற விவகாரங்களால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நடக்க உள்ள இக்கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என தெரிகிறது. நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1ம் தேதிக்கு பாஜ தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017ல் மாற்றம் செய்தது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட்டுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி  11ம் தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் பட்ஜெட் தாக்கல், 2ம் கட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம், மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றம் என பல்வேறு அலுவல்கள் நடக்க உள்ளன. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தி தொடங்கி வைக்கிறார். அதோடு, பொருளாதார ஆய்வறிக்கையும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து சோனியாகாந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம், என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு முடிவுகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரங்களை கிளப்பி  மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  குறிப்பாக, குடியுரிமை சட்டத்தை சில மாநில அரசுகள் அமல்படுத்தப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி இருப்பதால் அதுதொடர்பான காரசார விவாதங்கள் கூட்டத் தொடரில் நடக்க வாய்ப்புள்ளது.


Tags : Opposition parties ,Sonia Gandhi ,NPR ,CAA ,NRC ,Delhi ,Parliament ,National People ,Congress ,DMK , Delhi, Parliament, Sonia Gandhi, Congress, DMK, Citizenship Amendment, National People's Registry
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....