×

மக்களை காக்கும் முயற்சியில் ஈடுபடாவிடில் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றின் 2வது அலை  நாட்டு மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில்  தடுப்பூசி போடும் பணி பல்வேறு சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது.  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்குவங்க தேர்தல்  பிரசாரத்தை மக்கள் நலனில் அக்கறை கொண்டு ரத்து செய்திருக்கிறார். ஆனால், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வது மக்களின் உயிரை துச்சமென மதிப்பதால் ஆதாயம் தேடுகிற  நோக்கத்தில் பிரசாரம் மேற்கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.ஒரு பொறுப்பற்ற பிரதமரை இந்த நாடு பெற்றிருப்பதால் கடுமையான  பாதிப்புகளையும், வாழ்வாதார இழப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை இருக்கிறது. இத்தகைய அனைத்து துன்பங்களுக்கும்  பிரதமர் மோடி தலைமையில் இருக்கும் பாஜ ஆட்சி தான் காரணம். எனவே, மக்களை காப்பாற்றுகிற முயற்சியில் பிரதமர் உடனடியாக  ஈடுபடவில்லை எனில் கடும் விளைவுகளை பாஜ ஆட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்….

The post மக்களை காக்கும் முயற்சியில் ஈடுபடாவிடில் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : KS Azhagiri ,Chennai ,Tamil Nadu Congress ,President ,2nd wave of corona infection ,
× RELATED அகிம்சை நெறியை உலகிற்கு...