×

கெடு முடிந்தது உச்ச நீதிமன்றத்தை எதிர்நோக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது 1.47 லட்சம் கோடி ஏஜிஆர் கட்டண பாக்கியை அரசுக்கு இந்த மாதம் 23ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.  இதன்படி, வோடபோன் நிறுவனம் 53,039 கோடி, ஏர்டெல் 35,586 கோடி மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. இவை உட்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய மொத்த கட்டணம் 1.47 லட்சம் கோடி.
 இந்நிலையில், கூடுதல் அவகாசம் கோரி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20ம் தேதி மனு தாக்கல் செய்துள்ளன. இவை அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்த நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவில்லை. கடைசி நாளான நேற்று ரிலையன்ஸ் ஜியோ மட்டும் 195 கோடியை அரசுக்கு செலுத்தியுள்ளது.


Tags : Telecommunications companies ,Supreme Court Supreme Court , Supreme Court, Telecommunications Companies
× RELATED தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா...