×

காங்கிரஸ் தலைவர்கள் விளக்க வேண்டும் குடியுரிமை திருத்த சட்டத்தால் என்ன பாதிப்பு : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேச்சு

பெங்களூரு : மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் அமைச்சர்கள் யு.டி.காதர், ஜமீர்அகமதுகான் ஆகியோருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். பல்லாரி மாவட்டம் காந்தி பவனில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பிரகலகாத் ஜோஷி பேசியதாவது: 1968-ம் ஆண்டு காங்கிரஸ் தேசிய தலைவி சோனியாகாந்தி இந்தியாவுக்கு வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிரதமர் பதவிக்கு வரும் வரை அவர் குடியுரிமை பெறவில்லை. அதன் பிறகு 1970-ம் ஆண்டு டெல்லி வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது. இது வரலாற்றில் உள்ள ஆதாரங்கள்.

இத்தாலி நாட்டில் இருந்து வந்த சோனியா காந்திக்கே குடியுரிமை வழங்கப்பட்டபோது இந்து, ஜெயின், பவுத்தம், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது?. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் அமைச்சர்கள் யு.டி.காதர், ஜமீர்அகமத்கான் ஆகியோருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

Tags : leaders ,Congress ,Citizenship Amendment Act: Union Minister ,Pragalad Joshi ,speech , Congress leaders ,Citizenship Amendment Act, Union Minister Pragalad Joshi's speech
× RELATED நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா...