×

சிஏஏ பணியை துவங்கியது உ.பி. 32,000 அகதிகள் கண்டுபிடிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான அரசாணையை வெளியிட்டு,அகதிகளை அடையாளம் காணும் பணியை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை முதலில் அமல்படுத்தப் போவதாக உத்தரப் பிரதேச பாஜ அரசு அறிவித்தது. இதன்படி, இச்சட்டத்துக்கான அரசாணையை அம்மாநில அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் பட்டியலை தயாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அரசு உத்தரவிட்டது.

இதில் 32,000 அகதிகள் இனம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த பட்டியலை உத்தரப் பிரதேச அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். அதையடுத்து உள்துறை அமைச்சகம் அதை பரிசீலித்து இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து மற்ற பாஜ ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெயரை உத்தரப் பிரதேசம் பெற்றுள்ளது.

Tags : CAA , CAA mission, UP 32,000 refugees, discovery
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்