×

முருங்கப்பாக்கத்தில் ரூ6 கோடியில் பிரெஞ்சு தமிழ் கிராமம்: இறுதி கட்டத்தில் கட்டுமான பணி

புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தில் ரூ.6 கோடியில் பிரெஞ்சு தமிழ் கிராமம் கட்டுமான பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் திறப்பு விழா மார்ச் மாதம் நடக்கிறது. புதுவை முருங்கப்பாக்கத்தில் கலை மற்றும் கைவினை கிராமம் உள்ளது. 5 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இக்கிராமத்தில் 17 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. அங்கு, கலை, கைவினை பொருட்களை கலைஞர்கள் அங்கேயே உருவாக்கி காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர். மேலும், புதுவை பிச்சாவரம் என அழைக்கப்படும் படகு போக்குவரத்தும் உள்ளது. இக்கிராமத்தையொட்டி இடதுபுறம் அரிக்கன்மேடு அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், இக்கிராமத்தின் வலதுபுறம் பிரெஞ்சு தமிழ் கிராமம் (பிராங்கோ தமிழ் வில்லேஜ்) 2.5 ஏக்கரில் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் நிதி பங்களிப்பில் இக்கட்டிடம் கட்டப்படுகிறது.

பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெரிய. ெபரிய சன்னல்கள் கொண்ட கட்டிடங்களும், தமிழ் கலாச்சாரத்தை தத்ரூபமாக காட்டும் திண்ணை, முற்றம், தூண்கள், மர வேலைப்பாடுகளுடன் சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. இது மட்டுமின்றி ஆந்திரா கட்டிடக்கலையை சிறப்பிக்கும் வரவேற்பு அரங்கும், கேரளாவின் அழகிய கட்டிடக்கலையை கண்முன் காட்டும் உணவகம், மாநாட்டு கூடமும் கட்டப்படுகிறது. அதன்படி இங்கு, பிரெஞ்சு, தமிழ் வீடுகளும், கேரளா மாடலில் உணவகம், மாநாட்டுக்கூடம், ஆந்திரா வரவேற்பு ஹால் என அனைத்தும் ஒருங்கே இடம் பெறுகின்றன. உணவகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், பிரெஞ்சு உணவு வகைகளும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சமைத்து பரிமாறப்பட உள்ளன. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக இக்கிராமத்தில் இவ்வசதி செய்யப்பட இருக்கிறது.

தற்போது இந்த பிரெஞ்சு தமிழ் கிராம கட்டுமான பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பெயிண்ட், ஓடுகள் பதிக்கும் வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து மார்ச் மாதம் இக்கிராமம் திறப்பு விழா காண உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெரிய. ெபரிய சன்னல்கள் கொண்ட கட்டிடங்களும், தமிழ் கலாச்சாரத்தை தத்ரூபமாக காட்டும் திண்ணை, முற்றம், தூண்கள், மர வேலைப்பாடுகளுடன் சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டிடங்களும் கட்டப்படுகின்றன.

Tags : village ,Murungappakkam ,Tamil ,French , Murungappakkam, a French Tamil village
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...