×

சுதந்திரத்துக்குப் பின் எழுதப்பட்ட பல வரலாற்று அம்சங்களை அறிஞர்கள் கவனிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா: ‘சுதந்திரத்துக்குப் பின் எழுதப்பட்ட வரலாற்றில், பல முக்கிய அம்சங்களை வரலாற்று அறிஞர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்,’ என  பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள பழங்கால பாரம்பரிய கட்டிடங்களான பழைய கரன்சி கட்டிடம், தி பெல்வதேர் இல்லம், தி மெட்காப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகியவற்றை மத்திய அரசின் பண்பாட்டுத் துறை புதுப்பித்துள்ளது. இவற்றை நாட்டுக்கும் அர்ப்பணிக்கும் விழா, கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டிடத்தில் நேற்று நடந்தது.

இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று. நமது நாட்டின் பாரம்பரியத்தை நாம் உலகுக்கு காட்ட விரும்புகிறோம். இந்தியாவை பாரம்பரிய சுற்றுலா மையமாக மாற்ற நாம் விரும்புகிறோம். ெகால்கத்தாவில் உள்ள இந்தியன் அருங்காட்சியகம் உட்பட நாட்டில் உள்ள ஐந்து முக்கிய அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்துக்கும் மேம்படுத்தப்படும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், சுதந்திரத்துக்கு பின்பும் கூட எழுதப்பட்ட இந்திய வரலாறுகளில் பல முக்கிய அம்சங்களை, அதை எழுதியவர்கள் கவனக்கத் தவறி விட்டனர்.

 ‘மாணவர்கள் தற்போது தேர்வுக்கு படிக்கும் வரலாறு, இந்திய வரலாறு இல்லை,’ என ரவீந்திரநாத் தாகூர் கடந்த 1903ம் ஆண்டு எழுதிய குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். சிலர் வெளியில் இருந்து வந்து, ஆட்சியில் அமர்வதற்காக தங்கள் உறவினர்களையும், சகோதரர்களையும் கொன்றுள்ளனர். இது நமது வரலாறு அல்ல. இதை ரவீந்திரநாத் தாகூரே கூறியுள்ளார். இந்த வரலாற்றில், நமது நாட்டு மக்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என குறிப்பிடப்படவில்லை. அவர்கள் எல்லாம் அப்போது நாட்டில் இல்லையா? இவ்வாறு மோடி பேசினார்.


Tags : speech ,Modi ,Scholars ,independence , Freedom, scholars, PM Modi
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...