சென்னை: அமமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் வரும் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 10 மணியளவில் அவரது நினைவைப் போற்றும் விதமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அமமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவைப் போற்றும் வகையில் 18ம் தேதி பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
