×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு முதல்வர் எடப்பாடியிடம் முஸ்லிம் அமைப்பினர் மனு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பினர் நேற்று முதல்வரை சந்தித்து மனு அளித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை 11 மணிக்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் 23 இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஷாஜா மொஹிதீன், ஒருங்கிணைப்பாளர்கள் பஷீர் அகமது, முகமது அன்சூர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) தொடர்பாகவும், தமிழகத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என்றும் நேரில் வலியுறுத்தி மனு அளித்தனர்.

அப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ உமர் பாரூக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.

Tags : Edappadi , Muslim community petition ,Chief Minister Edappadi
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்