×

11 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும்: உலக வங்கி கணிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த உலக வங்கி, தற்போது இதனை 5 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நாட்டின் பொருளாதார செயல்திறனை மதிப்பீடு செய்ய பயன்படுகிறது. மத்திய புள்ளியியல் அலுவலகம் கூட, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜிடிபி 5 சதவீதம் மட்டுமே சாத்தியமாகும் என்று தெரிவித்திருந்தது. இது 11 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.
 இதுபோல், உலக வங்கியும் பொருளாதார வளர்ச்சியை குறைத்துள்ளது. இந்த வங்கி ஏற்கெனவே வெளியிட்ட மதிப்பீட்டில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜிடிபி 6 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.

இதை தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது. இருப்பினும் அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 5.8 சதவீதமாக  இருக்கும் என உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வங்கதேச பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்.  பாகிஸ்தான் 3 சதவீதம், இலங்கை 3.3 சதவீதம் வளர்ச்சி அடையும். இந்த ஆண்டில்  வளர்ந்த பொருளாதார நாடுகளின் ஜிடிபி 1.4 சதவீதம் சரியும். உலகளாவிய  வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Tags : 11 years, Economic growth, percent, World Bank ,forecast
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...