×

நீடாமங்கலம் அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரம்: பண்டிகை நெருங்குவதால் விற்பனை ஜோர்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ராயபுரம், வடகாரவயல், வீரவநல்லூர், தேவங்குடி, எருமைப்படுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாரம்பரிய தொழிலாள மண்பானை, சட்டி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பானை, சட்டி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு காலத்தில் மண்பானையில் சமையல் செய்து அதன் சட்டியில் குளம்பு வைத்த சாப்பிட்டு வந்ததால் எந்த ஒரு வியாதியும் இல்லாமல் இருந்து வந்தனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நகரம் மற்றும் கிராம புரங்களில் பொங்கல் பண்டிகை, அமாவாசை, ஆவனி ஞாயிறுகள், ஆடி வெள்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு பெரும்பாலானோர் புதிய மண் பானையில் சமைத்து உண்ணுவது வழக்கமாக இருந்தது.

காலப்போக்கில் தற்போது இதுபோன்ற விஷேசங்களுக்கு பித்தளை மற்றும் ஈய பாத்திரங்களையே அதிகம் பயன் படுத்துகின்றனர். ஒரு சில கிராம புறங்களில் மட்டும் பாரம்பரியமாக சமைக்கப்படும் மண்பானையையே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். வரும் 15ம் தேதி வர உள்ள பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு பகுதிகளில் பண் பானைகள் தயாரிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. தயாரித்த மண் சட்டி மற்றும் பானைகளை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கி செல்கின்றனர். இது தொடர்பாக ராமையா வேளார் கூறுகையில், இந்த மண்பாண்டம் செய்யும் தொழில் பாரம்பரியமாக செய்து வருகிறோம். அது மட்டுமின்றி கும்பாபிஷேக கலயங்கள், மண் குதிரைகள், சாமி சிலைகள், கல்பானைகள் உள்ளிட்டவைகளை ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கிறோம். இந்த தொழிலை தவிர வேறு தொழில் எங்களுக்கு தெரியாது.

இந்த தொழிலுக்கு களி மண், வண்டல் மண், சிரிது மணல் தேவைப்படுகிறது. தற்போது நாங்கள் ரூ.30 ஆயிரம் செலவு செய்து மண் சூலையை பயன்படுத்திதான் பானை, சட்டிகளை சுடவைக்கிறோம். மழை பெய்தால் வீணாகி வடும். எனவே தமிழக அரசு பாரம்பரிய மண்பாண்ட தொழில் செய்ய மானியத்தில் வங்கி கடன் வழங்கி மழை காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க காங்கிரீட் சூளை அமைத்து தரவேண்டும். மேலும், வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.



Tags : festival ,Nedamangalam Mammuram ,pot making ,Nedamangalam , Needamangalam, Pongal pot
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...