×

சொந்த பிரச்சனைக்காக நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறி மனுதாரருக்கு ரூ.15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

மதுரை: முதுகுளத்தூர் 8வது வார்டு ஒன்றிய திமுக ஆதரவு கவுன்சிலரை அதிமுகவினர் கடத்தியதாக வழக்கு தொடர்ந்த கவுன்சிலரின் மகன் ராஜாவுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சாத்தையா நீதிமன்றத்தில் ஆஜராகி தான் மகள், மருமகனுடன் இருப்பதாக வாக்குமூலம் அளித்ததால் வழக்கு தள்ளுபடி தள்ளுபடி ஆனது.

உயர்நீதிமன்றக் கிளையில் மனு


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வதியனேந்தலைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த  மனு: என் தந்தை சாத்தையா (58) சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3ம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களை  சந்திப்பதற்காக வெளியில் சென்றார். ஆனால், வீடு திரும்பில்லை.  செல்போனில் எனது தாய் தொடர்பு கொண்டார். அப்போது, அதிமுகவைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.இதைத்தொடர்ந்து நாங்களும், திமுகவினரும் எனது தந்தையை மீட்டுத் தருமாறு முதுகுளத்தூர் போலீசில் முறையிட்டோம். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 6ம் தேதி எனது தந்தையை அழைத்து வந்து  பொறுப்பேற்க செய்தனர். அப்போது என் தந்தையை சந்திக்க முயன்றேன். தடுத்துவிட்டனர். பதவியேற்பு முடிந்ததும், என் தந்தையை வலுக்கட்டாயமாக அதிமுகவினர் அழைத்துச் சென்றனர்.எனது தந்தையை அதிமுகவினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தந்தையை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சாத்தையா நேரில் ஆஜராக உத்தரவு


இந்த மனுவை நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோர் நேற்று அவசர வழக்காக விசாரித்தனர்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் தந்தையான திமுக கவுன்சிலரை ஆஜர்படுத்த உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு  தள்ளிவைத்தனர். அதே சமயம் சாத்தையா ஆஜராக தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

சாத்தையா நேரில் ஆஜராகி வாக்குமூலம்


இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் மனுதாரரின் தந்தை சாத்தையா ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் மகனுடன் இருக்க விரும்பாததால் மகள், மருமகனுடன் இருப்பதாகவும் சாத்தையா நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். இதையடுத்து சொந்த பிரச்சனைக்காக நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறி மனுதாரருக்கு ரூ.15,000 அபராதம் விதித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.


Tags : court ,petitioner , Sathyaiah, affidavit, introverts, Madurairakkil, councilor
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...