×

வெப்ப சலனம் நீடிப்பு 11 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வெயில் காரணமாக நீடித்து வரும் வெப்ப சலனத்தால், வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை முடிய உள்ள நிலையில், தமிழகம் புதுச்சேரியில் தற்போது வெயில் நிலவுகிறது. இதனால் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதனால் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு அதிகாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தமிழகத்தில் பரங்கிப்பேட்டையில் 30மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை 20மிமீ, எண்ணூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய இடங்களில் 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வெப்ப சலனம் நீடித்து வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யும்.

Tags : heat wave ,districts , Heat Exhaustion, Extension, 11 Districts, Rain
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை