×

பெட்ரோல் விலை 5வது நாளாக உயர்வு

சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 டாலரை தாண்டியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நேற்று 5வது நாளாக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் 16 காசு உயர்ந்து 78.64 ஆகவும், டீசல் 19 காசு உயர்ந்து 72.58 ஆகவும் இருந்தது. 5 நாளில் பெட்ரோல் 52 காசு, டீசல் 72 காசு உயர்ந்துள்ளது. பெட்ரோல் டெல்லியில் 75.69, மும்பையில் 81.28, பெங்களூருவில் 78.22க்கும், டீசல் டெல்லியில் 68.68, மும்பையில் 72.02, பெங்களூருவில் 70.97க்கும் விற்கப்பட்டது.

Tags : Petrol price hiked , fifth day
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...