×

வருசநாடு பகுதியில் பப்பாளி சாகுபடி அதிகரிப்பு

வருசநாடு: வருசநாடு பகுதியில் பப்பாளி விவசாயம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வருசநாடு அருகே தும்மக்குண்டு கிராமப்பகுதியில் பப்பாளி விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இப்பகுதியில் கொட்டை முந்திரி, இலவம் மரங்களை அழித்து விட்டு பப்பாளி விவசாய சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.பப்பாளி விவசாயத்திற்கு வேளாண்மைத் துறை சார்பாக மானியம், உரம், பூச்சி மருந்துகள் வழங்குவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக தும்மக்குண்டு மலைக்கிராமத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் பப்பாளி நடவு செய்துள்ள பகுதிகளை கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி ரமேஷ் கூறுகையில், கடமலை - மயிலை ஒன்றியத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் பப்பாளி சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நல்ல மகசூல் கிடைக்கிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் அதிக அளவில் குளிர்பானங்கள் தயாரிக்க பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. திண்டுக்கல், தேனி, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் கிலோ கணக்கில் பப்பாளியை வாங்கி செல்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது’’ என்ற தெரிவித்தார்.

Tags : Increase , papaya ,cultivation
× RELATED காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு