×

டெல்லி ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் மீண்டும் கலவரம்: மாணவர் தலைவர் மண்டை உடைப்பு

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இருதரப்பு மாணவர்களுக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. முகமூடி அணிந்தவர்களின் தாக்குதலில், மாணவர் தலைவரின் மண்டை உடைந்தது. ஜவகர்லால் நேரு பல்கலை(ஜேஎன்யு) கழகத்தில் விடுதி கட்டணங்களை உயர்த்தியதோடு, புதிய வரைவு கொள்கைகள் கொண்டு வரப்பட்டது. இதற்கு மாணவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து தொடர் போராட்டங்கள் நடந்தன. இதனிடையே, நேற்று முன்தினம் ஜேஎன்யு பல்கலை வளாகத்தில் உள்ள கம்பியூட்டர் சர்வர் அறை சூறையாடப்பட்டது.

இந்த விவகாரத்தில் மாணவர்கள் யூனியன் மற்றும் பல்கலை நிர்வாகம் இடையே பரஸ்பரம் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், பேராசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று பல்கலை வளாகத்தில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கலவரம் வெடித்தது. இடதுசாரி மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களும், ஏபிவிபி அமைப்பு மாணவர்களும் மோதிக்கொண்டனர். ஏபிவிபி மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதில் பல்கலை மாணவர் சங்க தலைவர் அசி கோஷின் மண்டை உடைந்தது. இதில் அவர் ரத்தம் சொட்ட சொட்ட சக மாணவர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

மேலும், தடி, இரும்பு கம்பிகள் மற்றும் சுத்தியலுடன் பல்கலை வளாகத்தை சுற்றிலும் நின்றுக்கொண்டு முகமூடி அணிந்த இடதுசாரி மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கினர். அதுமட்டுமின்றி ஹாஸ்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஏபிவிபி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். ஆனால், தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று இடதுசாரி மாணவர்கள் அமைப்பினர் கூறினர். மேலும் தங்கள் அமைப்பினரை தான் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் சரமாரியாக தாக்கினர் என்றும் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 11 மாணவர்களை காணவில்லை என்றும் இடதுசாரி அமைப்பு மாணவர்கள் கூறினர்.

இதற்கிடையே, பல்கலை நிர்வாகத்தின் அழைப்பின்பேரில் போலீசார் நேற்றிரவு பல்கலையில் நுழைந்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் நிலவரம் தொடர்பாக அதன் பதிவாளர் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், பல்கலைழக்கழக வளாகத்தில் கொடி அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து பல்கலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags : Reunion ,campus ,Delhi ,JNU , Delhi, JNU campus, riot: Student leader skull fracture
× RELATED தும்மனட்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி