×

வெங்காயம்... தக்காளி... காஸ்... பால், ரயில் கட்டணம்...எதிலும் தொடரும் விலைவாசி உயர்வு...கவலையின் உச்சத்தில் மக்கள் கண்டுகொள்ளாத அரசு!

சென்னை: விலைவாசி உயர்வு - இந்த வார்த்ைதகள் ஏழை, நடுத்தர மக்களை அவ்வப்போது பயமுறுத்தும். ஆனால், சமீப காலமாக இப்படி ஏதாவது உயர்வு என்று அறிவிப்பு வந்தாலே வெறுத்துப்போய்விடும் அளவுக்கு விரக்தியாகி விட்டனர். பெட்ரோல்,  டீசல் விலை உயர்வு பற்றி சொன்னால், இவை ஏறுவதும் தெரியாது...இறங்குவதும் தெரியாது. ஆனால், இதை பயன்படுத்துவோருக்கு தான் இறங்குவதை விட ஏறுவது தான் அதிகம் என்று. இப்படி  தான், காஸ் விலை உயர்வும். சந்தை  நிலவரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்தது அரசு. எப்போது இவற்றை எண்ணெய் நிறுவனங்களிடம் விட்டதோ, அன்று முதல், ஓசைப்படாமல் ஏறுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த 3 விலை ஏறினாலே போதும், எல்லா  அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடுமே. காய்கறிகள், பழங்கள் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென பால் விலை உயர்ந்துவிட்டது. அடுத்து ரயில் கட்டண உயர்வு. கிமீ. தூரத்துக்கு சாதா ரயிலில் 1 பைசா  உயர்வு ஏசி கட்டண வகுப்புக்கு 8 பைசா என்று உயர்த்தப்பட்டது. இவற்றில் ஹாட் டாபிக் என்றால் வெங்காயம் விலை உயர்வு தான். மற்ற ெபாருட்களுக்கு இல்லாத ஸ்பெஷல் குணம், வெங்காய விலை ஏற்றம் தான் அரசையே கவிழ்த்த பெருமை கொண்டது.

இவ்வளவு விலை ஏற்றத்துக்கும் ஒரு பக்கம்  அரசின் தவறான நடவடிக்கைகள், கொள்கைகள் காரணம். அடுத்து இடைத்தரகர்கள். மூன்றாவது இயற்கை சீற்றங்கள். என்றாலும், விவசாயத்தை நாளுக்கு நாள் நாம் இழப்பதும் முக்கிய காரணம். மொத்தத்தில் இயற்கை தந்த குடிநீரை நாம் பாட்டிலுக்கு கொண்டு வந்துவிட்டோம்; காற்றையும் விற்கும் அளவுக்கு நிலைமை முற்றி விட்டது. போதாக்குறைக்கு விவசாயமும் அழிந்து விட்டால்...? விலைவாசியின் விபரீத உச்சம் அப்போது  நம்மை எல்லாம் சித்ரவதை செய்யத்தான் போகிறது. இதோ நான்கு கோணங்களில் அலசல்:

* கடந்த ஆண்டு ஜனவரி விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று வரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.7.07, டீசல் ரூ.6.04 உயர்ந்துள்ளது.
* வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியமற்ற காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்தில் 19 ரூபாய் உயர்ந்துள்ளது.
* சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.590.50 ஆக இருந்தது. இது தொடர்ந்து 5வது மாதமாக அதிகரித்துள்ளது.

*  5 மாதங்களில் மட்டும் ரூ.143.50 உயர்ந்துள்ளது.
* பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரை தமிழக அரசு உயர்த்தியது.
* கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம், சமீபத்தில் கிலோ ரூ.200 வரை உயர்ந்தது.



Tags : Government , Onions ... Tomatoes ... Cas ... Milk, Train Fare ... Continued Prices ... Concerns Top Government
× RELATED நோயாளிகளின் மன அமைதிக்காக அரசு மருத்துவமனையில் புத்தர் சிலை