×

கீழக்கரை பகுதியில் சீசனில் சிக்கும் ருசியான சீலா

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, ஏர்வாடி, பெரியபட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. மீன்களில் அதிக சுவை கொண்டது நெய் மீன் எனப்படும் சீலா மீன். வஞ்சிரம் என்றும் அழைக்கப்படுகிறது. முள் அதிகம் இல்லாததால் சாப்பிடுவதற்கு இலகுவாகவும், ருசியாகவும் இருக்கும். இம்மீன்களின் ருசி அறிந்து வெளிமாநிலங்களை சேர்ந்தோரும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதிக்கு வந்து சீலா மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சீலா மீன் சீசன் இருக்கும். தற்போது சீசனை முன்னிட்டு சிறிய ரகம் முதல் பெரிய ரகம் வரை சீலா மீன்கள் அதிகளவு கிடைக்கிறது.குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை முதல் வாலிநோக்கம் வரை சீலா மீன்கள் அதிகளவு பிடிபடுகிறது. கரைவலை சீலா மீன் அதிக ருசியாக இருக்கும். நாட்டுப்படகுகளில் சென்று வலையை வீசி விட்டு வந்து, பின்னர் கரையிலிருந்து 50 முதல் 100 பேர் சேர்ந்து வலையை இழுத்து சீலா மீன்களை பிடிக்கின்றனர். 4 அடி நீளத்தில் 25 கிலோ எடை கொண்ட பெரிய சீலா மீன்கள் தற்போது பிடிபட்டு வருகின்றன. உள்ளூரில் சில்லரை விலைக்கு விற்பதோடு அதிகளவில் சீலா மீன்கள் பிடிபட்டால், மொத்தமாக வியாபாரிகள் வாங்கி தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது மீன் சந்தையில் கிலோ ரூ.800 வரைக்கும் விற்கப்படுகிறது….

The post கீழக்கரை பகுதியில் சீசனில் சிக்கும் ருசியான சீலா appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram District ,Dadakar ,Erwadi ,Periyapattinam ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...