×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க 6 கோடி மதிப்பில் குடோன்: மாநகராட்சி திட்டம்

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க 6 கோடி மதிப்பீட்டில் குடோன் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தேர்தலில் 200 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த மூன்று வகையான தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் பயன்படுத்தபடுகிறது. இதன்படி தேர்தலின் போது 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன. விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தபடவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மணலியில் உள்ள புதிய மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க நிரந்தர கட்டிம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சிந்தாரிபேட்டை அருணாச்சாலம் சாலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 6. 83 கோடி மதிப்பீட்டில் 4 இந்த கட்டிடம் அமையவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Corporation ,Goodon , Voting machines, worth Rs 6 crore, Goodon, Corporation
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...