×

சில்லி பாயின்ட்...

* தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியில் ஏற்கனவே பல வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்க வீரர் டொமினிக் சிப்லியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். கிறிஸ் வோக்ஸ், ஜாக் லீச் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு ஆறுதல் அளித்துள்ளது.
*  கர்நாடகா அணிக்கு எதிராக ஜன. 3ம் தேதி தொடங்க உள்ள ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில், மும்பை அணிக்காக நட்சத்திர வீரர்கள் அஜிங்க்யா ரகானே, பிரித்வி ஷா களமிறங்க உள்ளனர்.
* 2023ம் ஆண்டில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4 நாள் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதை கட்டாயமாக்குவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
* இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் ‘சூப்பர் சீரீஸ்’ தொடரை ஏற்பாடு செய்வது சரியல்ல என்று தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளெஸ்ஸி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க வேண்டும் என்றால் அதிக அணிகளை பங்கேற்க வைக்க வேண்டுமே தவிர, இது போல மூன்று பெரிய அணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் தவறு’ என்றார்.



Tags : du Plessy ,African , African team captain ,du Plessy
× RELATED தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ,...