×

உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்; 174 கி.மீ. தூரத்தை 47 நிமிடத்தில் கடக்கும்

பீஜிங்: மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பறக்கும் உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. பீஜிங் மற்றும் சாங்ஜியாகவ் நகரங்களுக்கு இடையே இந்த ஸ்மார்ட் ரயில் இயங்கும் வகையில் புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்சார் கருவிகளுடன் ஸ்மார்ட் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரயில் நிலையத்தை நெருங்கியவுடன் ரயிலின் கதவுகள் தானாகவே திறந்து மூடுகின்றன.

புல்லட் ரயில்களை விட பல்வேறு மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் இந்த அதிவேக ஸ்மார்ட் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ரயிலில் அமைக்கப்பட்டுள்ள இன்டெலிஜன் சிஸ்டம் அவசர காலங்களில் அபாயத்தை உணர்ந்து செயல்படுகிறது. மேலும் ரயிலில் ஏற்படும் சத்தம், வாயு, மற்றும் வெப்பநிலையில் மாறுபாடு நிலவினால் உடனடியாக இந்த இன்டலிஜன் சிஸ்டம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். 174 கி.மீ. தூரத்தை 47 நிமிடங்களிலேயே கடப்பதால் அதிவேக ஸ்மார்ட் ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.


Tags : World ,China ,Beijing , China, Beijing, Worlds Fastest Smart Train, Smart Train
× RELATED நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்