×

டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஊக்குவிக்க அரசு தீவிரம்

புதுடெல்லி: அரசு வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆய்வு கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் தெரிவித்ததாவது: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 1ம் தேதி முதல் சில பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

“ஆண்டு விற்று முதல் ரூ.50 கோடிக்கு மேல் உள்ள வர்த்த தொழில் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தணையை குறைந்த கட்டணத்திலான இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலம் மேற்கொள்ளலாம் என்று  நான் ஏற்கனவே கூறியுள்ளேன். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.”“மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணப்புழக்கம் மேற்கொள்வதால் ஏற்படும் செலவுகளை ரிசர்வ் வங்கியும், அரசு வங்கிகளும் வங்கிகளில் சேமிக்கப்படும் நிதி மூலம் கிடைக்கும் பணத்தில் சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”  என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags : Government ,money laundering Government ,Promote Digital Money Laundering , Government intensifies to promote digital money laundering
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...