×

ஆட்டோமொபைல் துறையினருக்கு சோதனை ஆண்டு

புதுடெல்லி: தொடர்ந்து வாகன விற்பனை சரிந்ததால், இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு சோதனை மிகுந்த ஆண்டாக மாறிவிட்டது.   பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பாதுகாப்பு விதிகள் என பல்வேறு கெடுபிடிகளால் மிக அதிக பாதிப்பை சந்தித்த துறைகளில் ஆட்டோமொபைல் துறை பிரதானமானது.  ஒவ்வொரு மாதமும் விற்பனை சரிந்ததால், இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்றம் என்பதே இல்லாத ஆண்டாக அமைந்து விட்டது. இத்துறையில் சுமார் 3.5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.  அடுத்த நிதியாண்டில் இருந்து இன்ஜின்கள் பிஎஸ்-6 தரத்துக்கு உயர்த்தப்படுகிறது. அதுவரை சோதனைக்காலம் தொடரும், வாகன விற்பனை சரிவு இந்த நிதியாண்டில் 13 சதவீதம் முதல் 17 சதவீதம் இருக்கும் எனவும், புத்தாண்டாவது ஏற்றம் தரும் ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags : Department of Automobile
× RELATED ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.