×

பிக் பாஷ் டி20 லீக் ஷார்ட் அதிரடியில் ஹரிகேன்ஸ் வெற்றி

ஹோபர்ட்: பிக் பாஷ் டி20 லீக் தொடரில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியுடன் மோதிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ரெனகேட்ஸ் 19.1 ஓவரில் 147 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 50 ரன் (37 பந்து, 6 பவுண்டரி) விளாசினார். ஷான் மார்ஷ் 37, மார்கஸ் ஹாரிஸ் 20 ரன் எடுத்தனர். ஹரிகேன்ஸ் பந்துவீச்சில் பாக்னர், எல்லிஸ், மெரிடித் தலா 3, குவாயிஸ் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஹரிகேன்ஸ் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர் டார்சி ஷார்ட் 60 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். மிலென்கோ, காலிப் ஜுவல் டக் அவுட்டாகினர். மெக்டெர்மாட் 51 ரன் (48 பந்து, 1 பவுண்டரி), டேவிட் மில்லர் 25 ரன்னுடன் (15 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹரிகேன்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.


Tags : Big Bash T20 League Short Action ,Hurricanes , Big Bash, T20 League, Short Action, Hurricanes, Win
× RELATED மீட்பு, நிவாரணம் மற்றும் மறு...