×

ஆணழகன் போட்டியில் வென்ற பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை

சென்னை: தேசிய மற்றும் சர்வதேச அளவில் உடற்கட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற பாஸ்கரனுக்கு முதல்வர் எடப்பாடி காசோலைகளை வழங்கினார்.  தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தேசிய அளவிலான பல்வேறு உடற்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றதற்காகவும், புனே நகரில் கடந்த 2.10.2018 முதல் 8.10.2018 நடந்த 52வது ஆசிய பாடிபில்டிங் வாகையர் போட்டிகளில் கலந்துகொண்டு 60 கிலோ கிராம் உடல் எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்காகவும், தாய்லாந்து நாட்டின், சியாங்மை நகரில் கடந்த 11.12.2018 முதல் 17.12.2018 வரை நடந்த 10வது உலக பாடிபில்டிங் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதற்காகவும், 2019ம் ஆண்டிற்கான மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜூனா  விருது பெற்றதற்காகவும், சோ.பாஸ்கரனுக்கு சிறப்பினமாக உயரிய ஊக்கத் தொகையான ரூ.25 லட்சத்துக்கான காசோலையையும், அவரது பயிற்றுநர் எம்.அரசுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.


Tags : competition ,men ,Baskaran , Male competition, Bhaskaran, incentives
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்