×

வணிகவரித்துறைக்கு புதிய ஆணையர்

சென்னை: வணிகவரித்துறைக்கு புதிய ஆணையராக எம்.ஏ.சித்திக்கை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் நேற்று வணிகவரித்துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக வணிகவரித்துறை ஆணையாளராக டி.சோமநாதன் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு கடந்த அக்டோபரில் மத்திய அரசு செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் மத்திய அரசின் செலவின பிரிவு செயலாளராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து அவர் நேற்று வணிகவரித்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்.  

இந்த நிலையில், நிதித்துறை முதன்மை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக்கை வணிகவரித்துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வணிகவரித்துறை ஆணையராக சித்திக் நேற்று பொறுப்பேற்று கொண்டார். தற்போது வணிகவரித்துறையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரி அமல்படுத்திய பிறகு வரி வருவாய் இலக்கை எட்டுவதில் திணறி வருகிறது. இந்நிலையில் வணிகவரித்துறை வரிவருவாய் இலக்கை அடையும் வகையில் புதிய ஆணையர் சித்திக் நடவடிக்கை எடுப்பாரா என்று வணிகவரித்துறை அதிகாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வணிகவரித்துறை ஆணையராக பொறுப்பேற்ற சித்திக் 1995ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி. அவர், கடந்த 1998ல் நிதித்துறை துணை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

Tags : Commissioner ,Commerce Commerce for New Commissioner , Department of Commerce, New Commissioner
× RELATED நடிகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார்