×

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 27 மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊரக தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 19ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருகிற 25ம் தேதி மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரையும், அதேபோல் 28ம் தேதி மாலை 5 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்ப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி அன்றும், விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி, மதுபானங்களை விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : holiday ,government ,polls ,district task force breweries ,Tasmac ,district , Local Election, Tasmac , Holidays, Tamil Nadu Government
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!