×

திருப்பதி ஏழுமலையான் கோயில் சூரிய கிரகணத்தை ஒட்டி மூடப்படும் .....தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: சூரிய கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் 26-ம் தேதி வியாழக்கிழமை காலை 8.08 மணி முதல் 11.06 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பே தேவஸ்தான கோயில்கள் மூடப்படும் என்பதால் டிசம்பர் 25-ம் தேதி இரவு 11 மணி முதல் 26-ம் தேதி மதியம் 12 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து கோயில் திறக்கப்பட்டு புண்ணியாவாசனம் சுத்தி உள்ளிட்ட காரியங்கள் முடிந்த பின் 2 மணிக்கு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு டிசம்பர்  26-ம் தேதி காலை திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை ரத்து செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் சூரியகிரகணத்தின் போது அரையாண்டு விடுமுறை உள்ளதால் பக்தா்கள் கோயில் மூடும் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முக்கியமாக திருப்பதியில் உள்ள அன்னதானக் கூடமும் சூரியகிரகணத்தை ஒட்டி மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tirupati Ezumalayan Temple , Tirupati ,Ezumalayan Temple,solar eclipse
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 82...