×

உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் உள்ளது போல உள்ளாட்சித் தேர்தலிலும் நோட்டாவுக்கு வாக்களிக்க வசதி வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கக்கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்பதால் வாய்ப்பு வழங்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விதிப்படி ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்யவில்லை எனில் அந்த வாக்கு செல்லாததாகிவிடும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில் 27  மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் உள்ளது போல உள்ளாட்சித் தேர்தலிலும் நோட்டாவுக்கு வாக்களிக்க வசதி வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,elections , NOTA
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து