×

கெஜ்ரிவாலுக்கு இப்படியும் சோதனை: இலவச வைபை துவக்க நேரத்தில் துண்டிக்கப்பட்ட இணையதளம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று இலவச வைபை திட்டத்தை கெஜ்ரிவால் அறிமுகம் செய்த நேரத்தில் நகரில் இணைய சேவையை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. டெல்லி சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி சுறுறுப்பாக பணியாற்றி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் திட்டப்பணிகளை வேகப்படுத்தியுள்ளதோடு, நிலுவையில் உள்ள திட்டங்களையும் வேகமாக அறிவிப்பு செய்து பணிகளை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலைநகரில் நேற்று முதல்வர் கெஜ்ரிவால் இலவச வைபை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆனால், அதே நேரத்தில் நேற்று டெல்லியில் முக்கிய சில பகுதிகளில் இணையசேவை முடக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருவதால் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து டெல்லி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இணையசேவை, பேசும் வசதி மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறுத்தி வைத்தனர். இதுபற்றி கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘நாங்கள் இலவச வைபை ெதாடங்கும் நேரத்தில் வேண்டும் என்றே இணையசேவை முடக்கப்பட்டுள்ளது’’ என்று குற்றஞ்சாட்டினார்.

Tags : Disconnected Kejriwal ,Wi-Fi , Kejriwal, free website, website
× RELATED இருக்கைகள், சிற்பங்கள், வை-பை...