×

நீர்க்குமிழிகள் வழியாகக் கால்வாய்களில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நெதர்லந்து புது முயற்சி

கால்வாய்களில் ஓடும் நீரிலிருந்து பிளாஸ்டிக் குப்பையை அகற்ற நெதர்லந்து புது முயற்சி எடுக்கவிருக்கிறது.கால்வாய்களில் நீர்க்குமிழிகளை உருவாக்குவதன் வழியாக, பிளாஸ்டிக் குப்பை நீரிலிருந்து அகற்றப்படுகிறது.இது எப்படிச் சாத்தியம்....?கால்வாயின் அடி மட்டத்தில் குழாய் நிறுவப்படுகிறது. அதில் துவாரங்கள் பொறுத்தப்படுகின்றன.துவாரங்களுக்குள் காற்றைப் பாய்ச்சினால், நீர்க்குமிழிகள் உருவாகும்.

நீர்க்குமிழிகள் நீரோட்டத்தில் செல்லும் பிளாஸ்டிக்கைத் தடுத்துவிடும்.நீரின் ஓட்டத்தில் செல்லும் நீர்க்குமிழிகள் குப்பையை அருகில் நிறுவப்பட்டிருக்கும் கலனில் சேர்த்துவிடும்.இந்த நீர்க்குமிழிகள் பறவைகள், மீன்கள், படகுகள் ஆகியவற்றுக்குத் தடையாக இருக்காது என்று திட்டத்தின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.திட்டம் தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கிறது; விரைவில் அதை முழுமையாகச் செயல்படுத்துவது நோக்கம்.ஆம்ஸ்டர்டாம் நகரில் கால்வாய்களில் ஆண்டுக்கு 24,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பை சேர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Netherlands ,canals , Plastic junk, canal, Netherlands
× RELATED சில்லி பாய்ன்ட்…