×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நகராட்சி பதவிகளுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 121 நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை  அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நகர்ப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வேட்புமனு தாக்கல், வைப்புத் தொகை, அதிகபட்ச செலவுத் தொகை, வாக்காளர் பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல், வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்டவைகள் தொடர்பான  தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 121 நகராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 9 நகராட்சியும், எஸ்சி பிரிவினருக்கு 8 நகராட்சியும், பெண்களுக்கு 51 நகராட்சியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 52 நகராட்சிகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Municipalities ,Government of Tamil Nadu , Urban Local Elections, Municipalities, Reservation, Declaration, Government of Tamil Nadu
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு