×

அமமுக கட்சியாக பதிவு: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உ்ள்ளாட்சி தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பட்டியல், அங்கீகாரம்  இல்லாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம்  வெளியிட்டது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜ, சிபிஎம்,சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், மாநில கட்சிகளாக திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட 257  கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தனி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் மேலும் 2 கட்சிகளை சேர்த்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 259 வது கட்சியாக இணைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முகவரியாக எண். 10, நடேசன் சாலை, அசோக் நகர், சென்னை என்ற முகவரி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : party ,State Election Commission ,affiliate party , affiliate party, Registration, State Election Commission, Directive
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...