×

எழிலகத்தில் பாம்பு புகுந்ததால் பீதியில் ஊழியர்கள் ஓட்டம்

சென்னை: சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் பொதுப்பணி, வருவாய், வணிகவரி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர், கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளை சந்திக்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில் பழமையான கட்டிடங்களில் பல ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்படுகிறது. இதனால், அந்த கட்டிடத்தில் இருந்த பாம்புகள் ஒவ்வொன்றாக வெளியே வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று எழிலகத்தில் உள்ள கல்சா மகால் வளாகத்தில் நடிகர் பாக்யராஜ் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக வந்தார். அவரை பார்க்க ஊழியர்கள், பொதுமக்கள் திரண்டனர். அப்போது, அங்கு இரண்டு அடி சாரை பாம்பு புகுந்ததால், இதை பார்த்த அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

தகவலறிந்து வந்த வனத்துறைக்கு ஊழியர் ஜெய் வினோத் மரத்தின் கீழே பதுங்கியிருந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்து சென்று, கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் விட்டார். தாம்பரம்: தாம்பரம், சானடோரியம், ஜிஎஸ்டி சாலையில்  தாம்பரம் ஒருங்கிணந்த நீதிமன்றம் உள்ளது. நேற்று காலை 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு இந்த வளாகத்தில் புகுந்தது. இதை கண்ட  ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து  வேளச்சேரி வனத்துறை ஊழியர்கள்  சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்து சென்றனர்.


Tags : snake, erupted in the floodplain,employees panic
× RELATED பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ...