×

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு பாசிச அமைப்புகள் கருவியாக பயன்படுத்துகின்றன: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக கவரும் கருவிகளாக பாசிச அமைப்புகள் பயன்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டரில், `குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை பாசிச அமைப்புகள் கவர்ந்து இழுக்கும் கருவிகளாக பயன்படுத்துகின்றன. இவற்றை எதிர்த்து வன்முறையில்லா அமைதி போராட்டம் நடத்துவதே சிறந்தது. இவற்றுக்கு எதிராக அமைதிப் போராட்டம் நடத்தும் அனைத்து அமைப்புகளுடனும் காங்கிரஸ் தோள் நிற்கும்’ என கூறியுள்ளார்.


Tags : Rahul Gandhi Accusation of Citizenship Amendment Act , Rahul Gandhi , Accusation , Citizenship Amendment Act, National Citizen Records
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில்...