×

அமமுக - அதிமுக ஒரே மாதிரி இல்லை தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: ‘அமமுக-அதிமுக இரண்டின் பெயரும் ஒரே மாதிரியாக இல்லை,’ என அதிமுக.வின் ஆட்சேபனையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. டிடிவி தினகரன் தலைமையிலான, ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’  (அமமுக) கட்சிக்கு தேர்தல் ஆணையம் இரு தினங்களுக்கு முன் அங்கீகாரம் அளித்தது. முன்னதாக, ‘அமமுக’ என்ற பெயரை பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் அதிமுக 2 மனுக்களை அளித்திருந்தது.

‘அமமுக என்ற பெயர் அதிமுகவை போலவே இருப்பதாலும், ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே, டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கியதால் ‘அம்மா’ என்ற அவரது பெயரை பயன்படுத்த தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை,’ என அதிமுக மனுவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த இரு மனுக்களையும் நேற்று நிராகரித்த தேர்தல் ஆணையம், ‘அமமுக என்ற பெயரும், அதிமுக என்ற பெயரும் ஒரே மாதிரியாக இல்லை. அம்மா என்பது பொதுவானது. அதை பயன்படுத்தக் கூடாது என கூற முடியாது,’ என தனது உத்தரவில் கூறியிருக்கிறது.

Tags : AMP - AIADMK ,EC ,AMMK - AIADMK , AMMK - AIADMK , not identical, EC directive
× RELATED டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில்...