×

வேலியே பயிரை மேய்வதா?... திருத்தணி நந்தி ஆற்றில் கேரிபேக் குவியல்; நகராட்சி செயலால் மக்கள் வேதனை

திருத்தணி: திருத்தணி நந்தி ஆற்றில் ேகரி பேக் உள்பட தடை செய்யப்பட்ட கழிவுகளை நகராட்சியே கொட்டி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கடைகளில் கேரி பேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடை, கடையாக சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்துவந்தனர். இதன்பிறகு சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருத்தணி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடை உரிமையாளர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பிளாஸ்டிக் பேரி பேக்குகளை பொதுமக்கள் கண்ட இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால் சாலை, தெருக்களில் பிளாஸ்டிக் கேரி பேக் குவிந்துகிடக்கிறது. இவற்றை துப்புரவு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இவ்வாறு அகற்றப்படும் கேரி பேக்குகளை திருத்தணி நந்தி ஆற்றில் கொட்டுகின்றனர். தற்போது நந்தி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்துள்ளதால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. ஆற்றின் கரையோரம் உள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயில்கள் பாதிக்கப்படுகிறது.

மேலும் நந்தி ஆற்றின் வழியாக செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நந்தி ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூகலந ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Veriya ,Nandi River ,Caribbean , Corollary, carryback pile
× RELATED ராம்சீதா பழத்தின் நன்மைகள்!