×
Saravana Stores

ஒரு வாரகாலம் துவம்சம் செய்து வந்த பெரில் புயல் கரையை கடந்தது: டெக்ஸாஸ் மாகாணத்தில் 25 லட்சம் மக்கள் தவிப்பு

டெக்ஸாஸ்: கரீபியன் தீவுகளில் உள்ள ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளையும் வெனிசுலாவையம் கடந்த வாரம் துவம்சம் செய்த பெரில் சூறாவளி புயல் மெக்சிகோவையும் உலுக்கி எடுத்து டெக்ஸாஸ் மாகாணத்தில் கரையை கடந்தது. கரீபியன் நாடுகளை 5 நாட்களுக்கு முன்பு வீசிய பெரும் சூறாவளி புயல் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கு 11 பேர் உயிரிழந்த நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்த அந்த சூறாவளி புயல் மெக்சிகோவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டெக்ஸாஸை நேற்று அதிகாலை பெரில் புயல் தாக்கியது. மணிக்கு 80 மயில் வேகத்தில் புயல் காற்று வீசியதால் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடல் அலைகள் மிகவும் சீற்றமாக காணப்பட்டன. பல நூறு மரங்கள் முறிந்து விழுந்தன. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு பலத்த காற்றும், கனமழையும் டெக்ஸாஸ் மாகாணத்தையே முடக்கி போட்டன.

பெரில் புயல் காரணமாக டெக்ஸாஸ் மாகாணம் முழுவதும் 121 மாவட்டங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. கட்டுக்கடங்காத சூறைக்காற்று வீசியதால் texasity துறைமுகம், call western உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டன. மின்தடை ஏற்பட்டதால் மாகாணம் முழுவதும் 25 லட்சம் பேர் இரவில் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். படிப்படியாக வேகம் குறைந்த இந்த சூறாவளி புயல் மடகோர்டா என்ற இடத்தில் கரையை கடந்தது.

பெரில் புயல் கரையை கடந்தாலும், டெக்ஸாஸ் கடற்கரையோர நகரங்களில் மிக கனமழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் கடந்த வாரம் கரீபியன் நாடுகளில் வீசும் போது எண் 5 ஆக வகைப்படுத்தப்பட்ட பெரில் புயல் 1வது எண் அளவுக்கு வீரியம் குறைந்து கரையை கடந்துள்ளது.

The post ஒரு வாரகாலம் துவம்சம் செய்து வந்த பெரில் புயல் கரையை கடந்தது: டெக்ஸாஸ் மாகாணத்தில் 25 லட்சம் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Beryl ,Texas ,HURRICANE BERYL ,CARIBBEAN ISLANDS ,JAMAICA ,VENEZUELA ,MEXICO ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில்...