×

கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வுக்கான மாற்று தேதி, விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு தொடர் மழையின் காரணமாக, (கடந்த 30.11.2019 முதல் 7.12.2019 வரை) சில இடங்களில் தள்ளி வைக்கப்பட்டிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வுக்கான மாற்று தேதி விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in பார்க்கவும்’.


Tags : Certificate verification applicants ,Gangman ,Applicants , Gangman Work, Certificate Verification, Short Message for Applicants, Notification of Power
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,249 பேர் எழுதினர்