×

இந்தியா ‘இந்து நாடு’ பாஜ எம்பி சர்ச்சை

புதுடெல்லி: பாஜ எம்பி ரவி கிஷண், ‘இந்தியா ஒரு இந்து நாடு’ என சர்ச்சையை கிளப்பி உள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த கோரக்பூர் பாஜ எம்பியும், நடிகருமான ரவி கிஷண் கூறியதாவது: இந்துக்களின் மக்கள் தொகை 100 கோடியை எட்டி விட்டது. எனவே, இந்தியா, இந்து நாடு என்பது வெளிப்படையாகி உள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவ நாடுகள் என பல இருக்கும் போது, நமது கலாசாரம், பாரம்பரியம், மதிப்புகளை பாதுகாக்க நமக்காகவும், ‘பாரதம்’ என்ற ஒரு நாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 100 கோடி மக்களுக்காக ஒரு நாட்டை உலகம் மதித்து அங்கீகரித்துள்ளது நமக்கு பெருமையே. மிக சிறப்பான மசோதாக்களை பாஜ நிறைவேற்றி வருகிறது. குடியுரிமை மசோதாவை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள் என்றார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.


Tags : India ,nation ,Baja MP ,Baja ,country , India, Hindu Country, Baja MB
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!